மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!

நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!

வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச் சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எது மரபணு (Gene)?

ஒவ்வொரு உயிரிலும், அதன் குரோமோசோம்களில் மரபுத் தன்மையை (கறுப்பு மயிரா, கருப்பு கருவிழியா, பழுப்புத் தோலா, குட்டையா, நெட்டையா எனும் உண்மைகளைக்) கொண்டிருக்கும் DNA குழுமத்தை மரபணு என்கிறார்கள். A,D,C,G எனும் நான்கு வித புரதங்களால் double=helix முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இப்புரதக் கூட்டுதான் நம் வாழ்வின் ‘அடிப்படை ஆதாரம்' என்றால் இன்றளவில் அது மிகையல்ல, நாயைக் கண்டால் மிரள்வதும், பெண்ணை கண்டால் வழிவதும், 4 வயதில் வரும் அம்மை, 40 வயதில் வரும் வயிற்றுப்புண், புற்று என நடக்கும் எல்லாவற்றிற்கும் இப்புரதக் கூட்டு காரணமாயிருக்கிறது.

அதே போல், ஒரு தாவரம் குட்டையாக வளர வேண்டுமா? மஞ்சள் பூ பூக்க வேண்டுமா? என அத்தனையும் அம்மரபணுவின் புரதப் புரோகிராம்கள் தான் நிர்ணயிக்கின்றன.

எவை மரபணு மாற்றப் பயிர்கள் (Genetically Modified Organism)?

காலை அகட்டி பாதங்களால் பற்றி, மரமேறி கொட்டைப்பாக்கு எடுக்க முடியாது. கைக்கெட்டும் தூரத்தில் பாக்கு விளைந்தால் என்ன? எப்பவும் அழுகாத பழங்கள், ‘சாலடு’க்கு வெட்ட ஏதுவான தடிப்புத் தோலுடன் தக்காளி, புழு துளைக்காத கத்தரி, பூச்சி அண்டாத பயிரினங்கள், வறட்சியிலும் வாடாத கிரானைட்' காய்கறிகள்'', என இந்த பூவுலகின் ‘தாதா' மனிதன் எதற்கும் மெனக்கெடாது இருக்க விளைபொருளில் நடக்கும் விஞ்ஞான விளையாட்டுதான் மரபணு மாற்றப் பயிர்கள். எப்படி?

உதாரணத்திற்கு, குதிரைபோல் ஓடும் நல்ல வேகமான திறனுடைய மகவு வேண்டுமெனில், பிறந்த குழந்தைக்கு தொடந்து பயிற்சி கொடுத்து பழக்க வேண்டியதில்லை. ஒரு குதிரையைப் புணர்ந்து, அதில் உருவாகும் கருவை உடைத்து, அதன் குரோமோசோமைச் சிதைத்து, அதன் DNA-ஐ வெட்டி எடுத்து தன் துணையின் கரு முட்டையில் நுழைத்து, பிள்ளையை பிரசவித்தால் அக்குழந்தை குதிரை போல் ஒடலாம். ஒலிம்பிக்கில் தங்கமும் வாங்கலாம்! என்ன? கொஞ்சம் வாய் நீளமாகவும், பின்பகுதியில் வாலும், கால் கைகளில் குளம்பும் இருக்கலாம்! அதனால் என்ன? குழந்தை குதிரை போல் ஓடும்! கற்பனை செய்யவே ‘பயங்கரமாக' உள்ளதல்லவா? இது தான் இந்த மரபணு மாற்ற பயிர்களின் உற்பத்தி தாரக மந்திரம்.

தனக்கு, தன் சந்தைக்கு வேண்டிய பயிரை உற்பத்தி செய்ய, பயிரின் மரபணுவை மாற்றம் செய்தோ, சிதைத்தோ அதே குடும்பப் பயிர் அல்லது வேறு உயிரின் (அது பாக்டீயாவோ, டைனசரோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) மரபணுவினை வெட்டி ஒட்டியோ, புதிய பயிரை உருவாக்குவது தான் இந்த மரபணு மாற்றப்பயிர்.

பயிர்பாதுகாப்பு, புழுக்களில் இருந்தும் வைரசுகளிலும் இருந்து பாதுகாப்பு, களைகளை மீறி பயிர் வளரும் தன்மை என்ற காரணங்களுக்காகவே இந்த வித்தை பயன்படுத்தப்படுவதாக, விஞ்ஞான மேதாவிக் கூட்டம், மான்சான்டோ தலைமையில் கூறிவந்தாலும், உட்காரணம் மற்றும் ஒரே காரணம் மொத்தமாய் உழவுச் சந்தையை அபகரிக்க நினைப்பது மட்டுமே. கூடுதலாய், சமீபத்திய உலகளாவிய உணவுப் பற்றாக்குறைக்கு ஒரே நிவாரணமாகவும் இவை உருப்பெற்று வருவது அவர்களது சமீபத்திய சாதனை.

‘இது ஒன்றும் புதிதல்ல' எனும் வாதமும் சில விளக்கங்களும்…

உங்கள் கொள்ளுத் தாத்தாவின் குணங்களைவிட உங்கள் உடல்நலத்தின் வளத்திலும் ஒரு சில நன்மைகளும், ஒரு சில தீமைகளும் பெற்றிருக்கக்கூடும். கடந்து வந்த சமூகச் சூழலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் மரபு தகவமைத்துக் கொண்ட விளைவு அது. விதையுடன் இருந்த வாழைப்பழம் இப்போது விதையற்று இருப்பதும், பெரிய நெல்லிக்கனி போலிருந்த தக்காளி இப்போது இப்படி இருப்பதும் என்றோ, பாக்டீரியாவாய் இருந்த பச்சையம் (Chlorophills) இன்று தாவர பகுதியாய் மாறியதும் மரபணு மாற்றத்தால்தான். ஆனால் அவை நிகழ 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் வரை ஆனது. இயற்கையை சிதைக்காமல், பல்லுயிர் ஒம்பி படைக்கப்பட்ட சந்ததிகள் அவை. ஒரு சிம்பன்ஸி குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான். ஆனால், அது நிகழ 1.2 மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாம்.

இப்படி நிகழும் இயற்கை மாற்றங்களை பல நூறுகோடி ரூபாய் கொண்டு உருவாக்கிய ஆய்வறையில் மரபணுவை வெட்டி ஒட்டி நிகழ்ந்த “DOLLY”க்களை உருவாக்குவதும் BT பருத்தி, BT அரிசி, BT சோளம் உருவாக்குவதும் எப்படி ஒன்றாகும்?
முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு!

‘பேசிலஸ் துருஞ்சியேனம்' எனும் பாக்டீயாவின் மரபை கத்தரிக்காயின் மரபணுவுடன் ஒட்டி, பிறக்கும் (உருவாக்கும்) கத்தரி மரபில் அந்த பாக்டீயாவின் ஒட்டபட்ட மரபணு உருவாக்கும் Toxin இருப்பதால் புழு நுழையாது என்கின்றனர். “அந்த நஞ்சு நம்மைத் தாக்காதா?” என்றால், “அதிகம் சாத்தியமில்லை, வெகுசிலருக்கு லேசான அரிப்பு முதல் மரணம் வரை ஏற்படலாம்” என்கின்றனர் மிக அலட்சியமாக.

முதலில் இது தேவையா? என்ற கேள்விக்கு நிச்சயமாக “இல்லை'' என்பது அதைப் படைத்த “பிரம்மா''க்களுக்கும் தெரியும். அடுத்து பாதுகாப்பானதா? என்றால் உலக சுகாதார நிறுவனமே மழுப்புகிறது (http://www.who.int/foodsafety/publications/biotech/20questions/en/).

மரபணு மாற்றப் பயிர்கள் எப்படி மனித நலத்தை பாதிக்கும்?
ஒவ்வாமை (Allergenicity) மரபணு ஊடுருவல் (Gene Transfer) வெளிபரவுதல் (Out Crossing) என்று மூன்று முக்கிய பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன.

ஒவ்வாமை (Allergenicity)
மல்லிகையை நுகர்ந்தால் களிக்கும் நம் மனம், அம்மோனியாவை நுகரும் போது சுளிப்பதும், இன்னும் வீரிய நைட்ரஜன் வேதிப் பொருட்களை நுகரும் போது உடம்பெல்லாம் தடிப்பது, மூச்சிரைப்பது என நோயைத் தருவதைதான் ஒவ்வாமை என்கின்றனர். அது உடனடி நிகழ்வாய் (hypersensitivity) இருக்கலாம்; அல்லது நாட்படவும் நிகழலாம். உடனடியாய் நிகழும் போது, Urticaria (உடல் முழுதும் வரும் தடாலடியான அரிப்பும், தடிப்பும்) மூக்கடைப்பு மற்றும் இரைப்பு (sinusitis & asthma), குமட்டல், வயிறு பிரட்டல், வாந்தி, (Nausea vomitting) தடாலடியாக மரணம் (anaphaloxis shock) ஆகியன ஏற்படக் கூடும்.

நாட்பட நிகழ்வது Celiac disease, தோல் கரப்பான்கள், ஆஸ்துமா, மூட்டுவலிகள், auto-immune disorders என பல வகை நோய்களை உருவாக்கும். இன்னும் காரணம் கண்டறியப்படாத பல நோய்கட்கு, இந்த மாதிரி உடலுக்குள் நுழையும் நச்சுக்கள் காரணமாக இருக்கக் கூடும்.

மரபணு ஊடுருவல் (Gene Transfer)

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு. அல்லது குடலினுள் தோன்றும் புதிய உயிர்கள் புதிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புண்டு, திடீர் சிக்கன் குனியா, பறவைக் காய்ச்சல், ஏன் HIV குறித்தும் இது போன்ற ஐயங்கள் உண்டு.

வெளிபரவல் (Out Crossing)

இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் கண்ணாடி குடுகைக்குள் விளைவிக்கப்பட போவதில்லை, விளைநிலத்தில் பயிராகும் போது மகரந்த சேர்க்கையில். பக்கத்து நிலத்து மாசற்ற பயிருக்கும், மூலிகைக்கும் ஊறு விளைவித்து எது GMO? என்ற கேள்வி கேட்கும்படி மொத்தமாய் கலந்துவிடவும் வாய்ப்புண்டு.

பதிலளிக்கப்படாத பல கேள்விகள்

“மரபணு புரதம் வயிற்றுள் சென்றவுடன் சிதைந்துவிடும், பயப்படத் தேவையில்லை. சிலருக்கு வேண்டுமாணால் சங்கடம் ஏற்படலாம்'' என்கிறது மான்சான்டோ கூட்டம். ஆனால் அந்த “சிலர்'' இந்தியரோ அல்லது ஆப்பிரிக்கரோ அல்லது ஒடுக்கப்பட்ட இனமோ/நாடாக மட்டும் என இருப்பது ஏன்? மான்சாண்டோ நிறுவனம் உள்ள அமெரிக்க நாட்டின் விளைநிலத்தில் ஆய்வு நடத்த கூடாது. அதன் துணை குழுமங்கள் உள்ள ஐரோப்பிய கண்டத்தில் GMOக்கள் நுழைய கூடாது. நம் நாட்டில் மட்டும் குப்பனும் சுப்பனும் ''அந்த சிலராக'' சங்கடப்படவேண்டும் என்று சொல்வதுதான் Globalisation நியதியா ?

மரபணு புரதங்கள் ஒவ்வாமை தராது என்று இன்னும் முழுமையாக ஒரு ஆய்வும் வரவில்லை.

அந்த புரதங்களை தெளிவாக அளவிடும் அளவுகோள்கள், எவை ஒவ்வாமை புரதங்கள் என அளவிட முடியவில்லை.

தற்போதுள்ள சோதனைகளின் தரம் (Standard) அதன் வரைஎல்லை (Limitation) பற்றி தெளிவான கருதுகோள்களோ ஆய்வுகளோ இல்லை.

எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன் முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும் கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத் தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய் நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!


-மரு. கு. சிவராமன், BSMS, PhD.,
“பூவுலகின் நண்பர்கள்”
http://www.poovulagu.org/
herbsiddha@gmail.com
(மரபணு மாற்று வேளாண்மையும், இந்தியச் சட்டங்களும்...! என்ற தலைப்பில் 15-06-2008 அன்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் கட்டுரை ஆசிரியர் உரையாற்றியதின் மூல வடிவம்)

12 மறுமொழிகள்:

Anonymous said...

சித்தர்களும் ரிஷிகளும் விரைந்தோடி வரட்டும்.

சிதைக்கப் படும் நம் இனத்தை சீர்தூக்கி நிறுத்த விரைந்தோடி வரட்டும்.

Anonymous said...

//முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு! //

மிகவும் சரியான விமர்சனம்.

வடுவூர் குமார் said...

வாவ்!
அருமையான அலசல்.

Anonymous said...

மருத்துவர் சிவராமனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்.

அருமையான ஆய்வுக்கட்டுரை எழுதி சிந்தனையை தூண்டச்செய்திருக்கிறார்.

தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

Anonymous said...

மருத்துவர்களின் சமூக நோக்கு போற்றுதலுக்குரியது.

இந்த விவகாரங்கள் குறித்து அவ்வப்போது எழுதி கருத்துப்பரவலுக்கு வழி வகுக்க வேண்டுகிறேன்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

"மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு."

அறிவியல், பரிணாமம் புரியாத
ஒரு அரைகுரையின் கருத்து இது.
அறிவியல் ரீதியாக இது சாத்தியமேயில்லை.ஒரு முட்டாள்த்தனமான அதீத
கற்பனை இது. இதை
எழுதியவர் எதில் முனைவர்
பட்டம் பெற்றார், எங்கு பெற்றார்
என்பதை அறிய விரும்புகிறேன்.

இதை எழுதியவருக்கு தேவையற்ற
அச்சத்தை உருவாக்குவதே
நோக்கம்.அமெரிக்காவில்
GM பயிர்கள் சோதனை செய்யப்படுகின்றன,பயிரிடப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன. அதை
நெறிப்படுத்துவதில் பிரச்சினைகள்
உள்ளன.ஆனால் அவை உடல் நலத்திற்கு தீங்கானவை என்று
உறுதி செய்யப்படவில்லை.
மேலும் சீனா, தென் அமெரிக்கா,
இந்தியா, கனடா என உலகின்
பல பகுதிகளில் இவை பயிராகின்றன.
எங்கும் இவற்றால் மனித உடலுக்கு
ஊறு என்பது நிருபிக்கப்படவில்லை.
ஒவ்வாமை என்பது அனைத்து வகை
உணவுகளுக்கும் உண்டு. சிலருக்கு
கத்தரிக்காய் ஒவ்வாது, சிலருக்கு
கடலைகள் ஒவ்வாது. அதற்காக
அவற்றை தடை செய்யக் கோருவீர்களா.சிலருக்கு சல்பா
மருந்துகள் அலர்ஜி என்பதற்காக
அவற்றை தடை செய்ய முடியுமா?

இந்தப் பதிவும்,மக்கள் சட்டம் பதிவும்
தேவையற்ற அச்சத்தினை உருவாக்க,
பொய்ப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.இதை நடத்துபவர்கள் பீதியை கிளப்புகிறார்கள், உண்மைகளை
மறைக்கிறார்கள்.வாசகர்கள் இவர்களை
நம்பி ஏமாற வேண்டாம்.

“முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு! ”

இது அபத்தம், ஏனெனில் மரபணு மாற்றம் எப்போதுமே தீங்கானது என்று
கூற முடியாது.மரபணு மாற்றம்
மூலம் மருந்துக்கள் உற்பத்தி
செய்யப்படுகின்றன.மருத்துவத்தில்
மரபணு மாற்றம் புதிய மருந்துகளை,
மாற்றுகளை கொண்டு வந்துள்ளது.

நுகர்வோர் நலன் said...

//அறிவியல், பரிணாமம் புரியாத
ஒரு அரைகுரையின் கருத்து இது.
அறிவியல் ரீதியாக இது சாத்தியமேயில்லை.ஒரு முட்டாள்த்தனமான அதீத
கற்பனை இது. இதை
எழுதியவர் எதில் முனைவர்
பட்டம் பெற்றார், எங்கு பெற்றார்
என்பதை அறிய விரும்புகிறேன்.//

முட்டாள்த்தனமான கருத்து இது என்று கண்டுபிடித்த புத்திசாலியின் தகுதிகள் பற்றி தகவல் தெரிவித்தால், கட்டுரையாளரின் தகுதி குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

//அமெரிக்காவில்
GM பயிர்கள் சோதனை செய்யப்படுகின்றன,பயிரிடப்படுகின்றன, பயன்படுத்தப்படுகின்றன. அதை
நெறிப்படுத்துவதில் பிரச்சினைகள்
உள்ளன.ஆனால் அவை உடல் நலத்திற்கு தீங்கானவை என்று
உறுதி செய்யப்படவில்லை.//

நெறிப்படுத்துவதில் பிரசினைகள் உள்ளன என்பதை "பெரிய"மனதோடு ஒப்புக்கொண்டதற்கு நன்றி. அவை உடல் நலத்திற்கு தீங்கானவை அல்ல என்பதற்கு நிரூபணங்கள் இருந்தால் அளிக்கவும். மரபணு மாற்ற வேளாண்மை செய்யப்படும் இடங்களில் வசிக்கும் எமது மக்களின் பாதிப்பு எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சோதித்து உறுதி செய்யவேண்டிய அவசியமில்லை.


//இந்தப் பதிவும்,மக்கள் சட்டம் பதிவும்
தேவையற்ற அச்சத்தினை உருவாக்க,
பொய்ப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன.இதை நடத்துபவர்கள் பீதியை கிளப்புகிறார்கள், உண்மைகளை
மறைக்கிறார்கள்.வாசகர்கள் இவர்களை
நம்பி ஏமாற வேண்டாம்.//

நன்றி. பெரியாரியல் பார்வையில் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்பதே, எங்கள் மக்களுக்கு நாங்கள் நேர்மையாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது. தங்கள் சான்றிதழுக்கு நன்றி.

//“முன்னது கலப்பு திருமணம் என்றால் இந்த மரபணு மாற்றம் கற்பழிப்பு! ”

இது அபத்தம், ஏனெனில் மரபணு மாற்றம் எப்போதுமே தீங்கானது என்று
கூற முடியாது.//

மிக்க சரி. தங்கள் வரிகள் மூலம் மரபணு மாற்றம் எப்போதுமே நல்லது அல்ல என்றும், அது அவ்வபோது தீங்கானதாக முடியலாம் என்றும் அறிய முடிகிறது. மரபணு மாற்றம் எப்போதெல்லாம் ஆபத்தாக மாறும் என்ற ரகசியத்தை தங்கள் வலைபதிவில் விரிவாக எழுதுவீர்கள் என்று ஆர்வமாக எதிர்பார்க்கிறோம்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உலகின் பல நாடுகளில் பயிரிடப்படுகின்றன.மக்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களை உட் கொள்கிறார்கள்.
இதுவரை அவை உடல் நலனுக்கு தீங்கானவை என்பது நிரூபணமாகவில்லை.தீங்கானவை என்று நீங்கள் கருதினால் விபரங்களைத் தரவும்.எங்கு, எத்தனை
பேருக்கு,எந்த வித நோய்கள் இதனால்
விளைந்தன என்பதை எழுதுங்கள்.

“மரபணு மாற்ற வேளாண்மை செய்யப்படும் இடங்களில் வசிக்கும் எமது மக்களின் பாதிப்பு எங்களுக்கு தெரியும். அதை நீங்கள் சோதித்து உறுதி செய்யவேண்டிய அவசியமில்லை. ”
தெரியும் என்றால் சான்றுகளைத் தரலாமே.

“மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை உட்கொள்ளும் நபருக்கு, உட்சென்ற பயிரில் ஒட்டியிருக்கும் வேறு உயிரின் மரபணு குடலுக்குள் உள்ள நன்மை செய்யும் பாக்டீயாவிலோ, வைரஸிலோ அல்லது மொத்தமாய் அந்த மனிதனின் மரபணுக்குள் கலக்கும் / உறவாடும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கையில், தவளை போல் குழந்தை பிறக்கவும், அல்லது பிறந்த குழந்தைக்கு கை கால்களில் காய் கனி காய்க்கவும் வாய்ப்புண்டு."

கை கால்களில் காய் கனி காய்க்க வாய்ப்புண்டு என்பதை எப்படி அறிந்தீர்கள். சீனா உட்பட பல
நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள்
அந்த பயிர்களிலிருந்து பெறப்பட்ட
உணவுகளை பல ஆண்டுகளாக
உட் கொண்டிருக்கிறார்கள். அப்படி
ஒரு குழந்தை எங்காவது பிறந்திருக்கிறதா இல்லை எந்த அறிவியல் நூலாவது இது சாத்தியம்
என்று கூறியிருக்கிறதா. இன்னும்
குறிப்பாக கேட்கிறேன், இந்த ப்யிர்களிலிருந்து பெறப்பட்டவற்றை
உட் கொண்டவர்களின் விந்து, சினை
முட்டைகளில் இதனால் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளதா?

நுகர்வோர் நலன் said...

அன்பு நண்பர் ரவிச்ரீனிவாஸ் அவர்களுக்கு,

இடஒதுக்கீட்டால் உங்களுக்கு உடனடியாக தீங்கு எதுவும் வரவில்லை என்றாலும், உங்கள் சந்ததிகளை அது பாதிக்கும் என்பதால் எதிர்க்கிறீர்கள்.

அதுபோல மரபணு மாற்றத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து நீங்கள் திருப்தி அடையும் வகையில் நிரூபணங்களை அளிக்கும் நேரத்தில் அதற்கான தீர்வுகளை தேடுவதற்கான காலம் கடந்து போயிருக்கலாம்.

எனவே கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்கள் கருத்துகளை உங்கள் வலைபதிவில் எழுதுங்கள். விவாதிப்போம்.

அசுரன் said...

//எலிகளிலும் குரங்குகளிலும் GMO உணவுகளில் சோதனை நடத்துகின்றனர். அதன் முடிவுகள் மனிதர்களில் அப்படியே பிரதிபலிக்கும் என்று எவ்வித உண்மையும் கிடையாது. மொத்தத்தில் மரபணு மாற்றப் பயிர்கள் புதிய நோய்களைத் தோற்றுவிக்கவும், அதற்கான மருத்துவச்சந்தைக்கு வழிகாணவும், உழவையும் அதன் கலாச்சாரத்தை சிதைக்கவும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வேளாண் கூலிகளாய் நாம் என்றும் நிற்கவும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன.

விழிப்புடன் இருந்து அதைத் தகர்ப்போம்!//

இதுல கட்சீல ஒன்னு வருது பாருங்க.. அதாவது வேளான் கூலிகளாய் நிற்போம் என்ற வரிகள். அதுக்கு நம்ம சிரினிவாஸ் ஏதாவ்து கருத்து சொன்னா சிறப்பா இருக்கும். ஏன்ன விதை மற்றும் உர தட்டுப்பாட்டில் இந்தியாவெங்கும் விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுப்பட்டுள்ள நிலையில் இந்த வரிகள் அதன பருண்மையான வடிவில் வெளி வருகின்றன.

ரவி சிரினிவாஸ் தனது நுணூக்கமாக மூளையை கொஞ்சமே கொஞ்சம் கசக்கி பிழிஞ்சி எதாவது விசயத்தை புரிய வைச்ச நெம்ப சேம்மாமா இருக்கும்.

அசுரன்

அசுரன் said...

//மக்கள் பிரதி / COPY LEFT//

இது சூப்பரப்பு... அதான் ரைட்டுக்கு (அதான் பொலிடிக்கலே ராங்க் பார்ட்டி) கோபம் வருது போல. பார்ப்பான பன்னாடைகளும், ஏகாதிபத்திய இடியாப்பங்களும் வலைச்ச வலைச்சி பொய் சொல்ற இடத்துலயெல்லாம் விட்டுபுடுவாங்க... இப்போ சமீபத்துல கூட பெட் டோ ல் விலைவாசி உயர்வை வைச்சி சகட்டு மேனிக்கு பொய் சொல்லி ஏகா, பாப்பானிய அடிவருடி கும்பல் கட்டுரை எழுதுச்சி. பொலிடிகலி ராங் பார்டி சினிவாஸ் அப்போ எங்க ஒளிஞ்சிருந்தாருன்னு தெரியல. ஆனா நாம ஏதாவது உண்மைகளை மக்களுக்கு சொல்லாம்னு பார்த்தா அதுல தோண்டி துருவி ஏதாவது குத்தம் குறைகள கண்டுபிடிச்சு பெரிய நியாயவான்கள் போல நீட்டி முழுக்கவான்கள்... உடனே இப்படி ஒரு பதில் சொல்வாரு நான் எல்லாருக்கும் பதில் எழுத முடியாது அப்படின்னு. அய்யா ராசா நீங்க எதுவுமே சொல்ல வேணாம். ஏற்கனவே நான் எழுத மாட்டேன்னு ரெண்டு தபா ஓடிப் போய்ட்டு வெக்கமில்லாம திரும்ப வந்தீங்கள்ள அதே மாதிரி ஒரேடியா எழுதாம உக்காந்திருந்தாலே பாதி தும்பம் குறைஞ்சிரும்....அசுரன்

Deepa said...

சில மாமரங்களில் கைக்கெட்டும் தூரத்தில் மாங்காய் காய்க்கிறதே.. இதுவும் Genitically Modifiedஆ.. அல்லது.. Cross - Breeding / In - breedingஆ ??

நன்றி,
வணக்கம்
தீபா