கிரெடிட் கார்டு நுகர்வோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய அம்சங்கள் பில் கணக்கிடும் தேதியும், அந்த பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி தேதியும் ஆகும்.
இந்த தேதிகளை முதல் பில்லில் கண்டு கொள்ள முடியும். பில் தயாரிக்கப்படும் தேதி பில்லிங் தேதியாகும். அந்த பில்லில் கூறப்பட்டுள்ள தொகையை கட்டுவதற்கு அனுமதிக்கப்படும் கடைசி நாள் பேமென்ட் தேதியாகும்.
இந்த இருநாட்களுக்கும் இடையில் சுமார் 22 நாட்கள் இருக்கும். இந்த நாள் வட்டியில்லா கடன் நாட்களாகும்.
பில் தேதிக்கு முதல் நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு வட்டியில்லா கடன் நாட்கள் 23 நாட்களாகும். பில் தேதிக்கு அடுத்த நாள் பொருள் வாங்கும் நுகர்வோருக்கு 52 நாட்கள் வட்டியில்லா கடன் நாட்களாக இருக்கும்.
உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 4 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித்தேதி 26 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...
3ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
4ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
5ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும்.
மற்றொரு உதாரணமாக, பில் தயாரிக்கப்படும் தேதி 28 ஆகவும், பணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி 20 ஆகவும் இருக்கும் ஒரு நுகர்வோர்...
27ம் தேதி பொருள் வாங்கினால்
23 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
28ம் தேதி பொருள் வாங்கினால்
22 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
29ம் தேதி பொருள் வாங்கினால்
53 நாட்களுக்கு வட்டியில்லா கடன் நாட்களும்
...பெற முடியும். இதை முழுமையாக புரிந்து கொண்டால் இந்த கிரெடிட் கார்டை லாபகரமாக பயன்படுத்துவதை கற்றுக்கொள்ளலாம்.
-ஆசிரியர் குழு
பின்குறிப்பு: கிரெடிட் கார்டு குறித்த உங்கள் சந்தேகங்களை மறுமொழிப் பெட்டியில் பதிவு செய்யுங்கள். அதற்கு பதில் காண முயற்சிப்போம்.
1 மறுமொழிகள்:
பழைய பில்லை முழுவதும் கட்டி முடித்திருந்தால்தான் நீங்கள் சொல்வது போல் வட்டியில்லா கடன் கிட்டும்.
உதாரணமாக், சென்ற மாதம் கிரிடிட் கார்டில் வாங்கியது 10,000 ரூபாய். நீங்கள் செலுத்தியது 9,900 என்று வைத்துக் கொள்வோம்.
நீங்கள் பாக்கி வைத்திருக்கும் தொகைக்கும், மீண்டும் இந்த மாதம் வாங்கும் தொகைக்கும் சேர்த்து மாதம் 2.95 (36% வருடம்) முதல் 3.95(42% வருடம்) என்ற வகையில் வட்டி வாங்கி விடுவார்கள். ஜாக்கிரதை.
உங்கள் கர்டு பில்லின் பின்புறம் கொடுத்துள்ள விபரங்களை ஒரு முறையாவது முழுவதும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
அல்லது ஆடிடர் நண்பரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.
மற்றொரு ஏமாற்று minimum due கட்டுவது.
சிட்டி கர்டு பில்லின் பின்பக்கம் உள்ள குறிப்பு.
If you purchase for 5000 rupees and pay only the minimum due specified in the card, the repayment would stretch to 6 years. So whenver you happen to have more cash flow tpay more.
ரூபாய் 5000 பொருட்கள் வாங்கி, மாதாமாதம் அவர்கள் சொல்லும் minimum due மட்டும் கட்டி வந்தால், 5000 ரூபாய் கட்டி முடிக்க 6 வருடங்கள் ஆகும். தேவையா என்று அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
Post a Comment