
முழு விவரத்திற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.
இந்த துயர சம்பவம் குறித்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை 17வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது சரவணா ஸ்டோர்ஸ் பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நடந்த குற்றத்தை மறைக்காமல் ஒப்புக்கொண்டனர்.

மேலும் குற்றம் செய்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்ட ஏழு பேரும் பரம ஏழைகள் என்றும், முதல் தடவை குற்றம் செய்திருப்பதாகவும் எனவே குறைந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தலா ரூ.1,500-00 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
.....
மேற்கூறப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் வாடிக்கையாளர் திரு. இளஞ்செழியன் காவல்துறையில் முதலில் புகார் செய்ததால்,சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் செய்த புகார் ஏற்கப்படவில்லை.
மற்ற தருணங்களில் தாக்குதலுக்கு உள்ளான வாடிக்கையாளர் மீது சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் திருட்டுப்புகார் பதிவு செய்யப்பட்டு தாக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் துறையில், தகவல் உரிமைச் சட்டப்படி சேகரித்த புள்ளிவிவரத்தில் 2008ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் 19 திருட்டுப்புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது மாதத்திற்கு இரு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
.........
ஆனால் திரு. இளஞ்செழியன் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் தங்களை முதல் தடவையாக குற்றம் செய்த குற்றவாளிகள் என்று கூறியுள்ளனர். அது உண்மையாக இருக்கலாம். பணியாளர்கள் நிறுவனம் மாறக்கூடியவர்கள்தான்!

ஆனால் உண்மை குற்றவாளிகள் அந்த ஊழியர்கள்தானா என்பது அனைவருக்கும் தெரியும்.
..........
திரு. இளஞ்செழியன், சரவணா ஸ்டோர்ஸ் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
.........
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களும் சரவணா ஸ்டோர்ஸ்-க்கு பொருட்கள் வாங்க செல்லலாம். பாதுகாப்பாக சென்று பொருட்களை வாங்கி வருவதற்கு வாழ்த்துகள்.
..........
விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதேனும் நடந்துவிட்டால் திரு. இளஞ்செழியனின் வழியில் எதிர்த்து போராடுங்கள். அநீதிக்கு எதிராக போராடாமல் இருப்பதும், அநீதிக்கு துணை போவதுதான்.
பின்குறிப்பு: தமிழ்மணம் பரிந்துரை பகுதியில் உங்கள் பரிந்துரையை செய்யுங்கள். நன்றி!
13 மறுமொழிகள்:
kandippa thanks for the information
http://gkpstar.googlepages.com/
இங்கு பொருள் வாங்குவதைக் கூட நிறுத்தலாம்.
சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்னாலும், அதை நினைவு கூர்ந்து தொடர்நது அவதானித்து செய்திகளை தரும் உங்களுக்கு நன்றி.
அதெப்படி....பரம ஏழைன்னா...குற்றம் செஞ்சால் குறைஞ்ச தண்டனையா?????
பத்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கணும். அந்த ஆட்கள் பரம ஏழைகள்ன்னா அந்த நிறுவனம் அந்த அபராதத்தைக் கட்டணும். இப்படி இருந்தால்தான் நிறுவனம் நல்ல ஆட்களை வேலைக்கு வைக்கும். மரியாதையா நடக்கப் பயிற்சியும் கொடுக்கும்.
எங்கூரில் (நியூஸி) போலீஸ், சாதாரணமனுசன்மேல் கை வைக்க முடியாது, அதுமட்டுமில்லை, மரியாதைக்குறைவா ஒரு சொல் சொல்ல முடியாது.
இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் பொது இல்லை(-: அது ஆளுக்குத் தகுந்தாப் போல வளைஞ்சு நெளியும் புழு.
என்னது தலா ரூ.1,500 தண்டனையா??? பாவம் இளஞ்செழியன், அவருடைய மனக்காயங்களுக்கு யார் மருந்திடுவது :(
பொருள் வாங்குவதை நிறுத்தலாம்.
நன்றி கார்த்திக் பிரபு, யோகன், அனானி.
துளசி கோபால்! உங்கள் ஊரின் சட்டநடைமுறைகள் குறித்து அவ்வபோது எழுதுங்களேன். இங்குள்ளவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். அதுவும் ஒருவகை கல்விதான். நிச்சயம் பலனளிக்கும். செய்வீர்களா?
நன்றி மஸ்தான். உங்கள் வலைபதிவும் நன்றாகவே இருக்கிறது. அவரது மனக்காயங்களுக்கு நிவாரணமாக இழப்பீடு கோரி தனிவழக்கு தொடுக்கும் எண்ணத்தில் திரு இளஞ்செழியன் இருக்கிறார்.
நன்றி வெங்கட், தங்கள் கருத்துகளுக்கு.
எங்கூர் நடைமுறை சரித்திரம், மக்கள் வாழ்க்கைமுறை, சட்டதிட்டம் இப்படி ஒரு தொடர் எழுதி இருக்கேன். நேரம்கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. வெறும் 64 பகுதிகள்தான்.
தலைப்பு: நியூஸிலாந்து
நன்றி திரு.துளசி கோபால். இது போன்ற விடயங்களே சமகால நிலைமைகளை ஒப்புநோக்கி அதன் மூல சமூக மேம்பாட்டுக்கு வழி வகுக்கும்.
தங்கள் பதிவுகளுக்கு நன்றி. விரைவில் படித்துவிட்டு தொடர்பு கொள்கிறோம்.
மீண்டும் நன்றி.
சினிமா நடிகைகளின் ஆடல், பாடல்களை படம் பிடித்துக்காட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்து, அவர்களை ஏமாற்றி வியாபாரம் செய்யும் மக்கள் துரோகிகளை அடையாளம் காட்டியதற்கு நன்றி.
மின் மற்றும் மின்னணுப் பொருட்களை இந்த கடைகளில் வாங்காமல் இருப்பதே நல்லது. அவற்றுள் பல பொருட்கள் போலிகளாக தோன்றுகிறது.
மேலும் முறையான பில் தராமல், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதோடு, வரி ஏய்ப்பிலும் ஈடுபடும் இந்த கயவர்களை தண்டிக்க வேண்டிய அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இந்த கழிசடைகளிடம் காசு வாங்கிக்கொண்டு கடமையை மறப்பது கயவாளித்தனம்.
சபாஷ். பல நாள் ஒரு நாள் அகப்படுவான்.
சபாஷ். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
ஏன் வடிக்க்யாளர் மீது இவ்வாறு தாக்குகிறார்கள், இப்படி தாக்குவதல் யாருக்கு என்ன பயன், இதன் மூலம் பலன் அடையும் நபர் யார் ?
Post a Comment